விருதுநகர்
நாய் கடித்ததில் 2 பெண்கள் படுகாயம்
|நாய் கடித்ததில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வ.புதுப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பாப்பா (வயது 64), பாண்டிச்செல்வி (28) ஆகிய 2 பேரின் வீட்டிற்குள் புகுந்த நாய் அவர்கள் 2 பேரையும் கடித்தது. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பாப்பா என்பவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பொதுமக்களுக்கு தொடர்ந்து தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.