< Back
மாநில செய்திகள்
2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
மாநில செய்திகள்

2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

தினத்தந்தி
|
13 May 2024 11:13 PM IST

தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சீபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்