பெரம்பலூர்
ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய 2 பெண்கள் கைது
|ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்-துறையூர் சாலையில் கடைவீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்கு நேற்று முன்தினம் மதியம் துணிகள் வாங்குவதுபோல் வந்த பெண்களில் 2 பேர் சேலைகளை திருடிக்கொண்டு கடையை விட்டு அவசர அவசரமாக வெளியே செல்ல முயன்றனர். இதனை கண்ட ஜவுளிக்கடையின் மேலாளர் வித்யா சாகர் அந்த பெண்களை கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர் பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபாடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகேசனின் மனைவி ஜெயலெட்சுமி (வயது 37), மற்றொருவர் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசனின் மனைவி பிரியதர்ஷினி (20) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு ஜெயலெட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 8 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.