< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது

தினத்தந்தி
|
28 Sept 2023 2:30 AM IST

சிங்காநல்லூர் அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சிங்காநல்லூர்

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் சாந்தி(வயது 40). இவர் சிங்காநல்லூர் அருகே கள்ளிமடை சந்திப்பில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சாந்தி நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு, வீட்டுக்கு செல்வதற்காக கள்ளிமடையில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் பஸ்சில் ஏறினார். சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு வந்ததும் பஸ்சில் இருந்து கீழே இறங்கியபோது, அவருடன் 2 பெண்கள் அவசர அவசரமாக கீழே இறங்குவது போல் பாசாங்கு செய்து, சாந்தியிடம் இருந்த பணப்பையை திருடினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி கூச்சலிட்டார். உடனே சக பயணிகள் அந்த 2 பெண்களையும் பிடித்து, சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த ரேகா என்ற அஞ்சம்மாள்(47) மற்றும் அழகர் கோவிலை சேர்ந்த ராணி(48) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்