< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
மதுவிற்ற 2 பெண்கள் கைது
|26 Jun 2023 7:00 PM IST
வேலூரில் மதுவிற்ற 2 பெண்கள் கைது ெசய்யப்பட்டனர்.
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வேலூர் கஸ்பா, கொசப்பேட்டை பகுதியில் மது, சாராயம் விற்பனையை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீட்டின் அருகே பதுக்கி வைத்து மது விற்ற கஸ்பா மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன் மனைவி சூரியா (வயது 55),
கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்த நாராயணன் மனைவி சாந்தி (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.