< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
2 லாரிகள் பறிமுதல்
|23 July 2023 12:15 AM IST
விருத்தாசலம் அருகே வண்டல்மண் கடத்தி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம்
விருத்தாசலத்தை அடுத்த காணாதுகண்டான் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் பெரியகண்டியாங்குப்பம் ரெயில்வே கேட் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்தனர். அப்போது லாரியை நடுரோட்டில் விட்டு விட்டு டிரைவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் லாரியை சோதனை செய்தபோது வண்டல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் லாரிகளை பறிமுதல் செய்து விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 டிரைவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.