< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி
|23 Oct 2023 2:43 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி திருச்சி வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கோட்டாத்தூரை சேர்ந்த சஞ்சீவியின் மகன் வினோத் (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் நேற்று இரவு பெரம்பலூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் அருகே சென்றபோது அந்த வழியாக கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வினோத், ராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.