< Back
மாநில செய்திகள்
ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
18 Dec 2022 5:18 PM IST

ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறை இயக்குனர் ஆபாஸ் குமார் உத்தரவின் பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில், துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வழிகாட்டுதலின் பேரில், இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் சுங்கசாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 36) மற்றும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்த தனசேகர் (50) ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேனையும், ரேஷன் அரிசியையும் போலீசார் திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்