< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
|3 July 2023 12:15 AM IST
நெல் அரவைக்காக திருப்பூருக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்குரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.