< Back
மாநில செய்திகள்
சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தன
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தன

தினத்தந்தி
|
11 Nov 2022 12:15 AM IST

சரக்குரெயில் மூலம் சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தடைந்தன.

சின்னசேலம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை நாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதன்படி சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு 50 ஆயிரத்து 879 மூட்டைகளில் மொத்தம் 1906 டன் நெல் மூட்டைகள் வந்தன. இந்த நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் ஏற்றி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பின்னர் ஆலைகள் மூலம் நெல் அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகளாக தயார் செய்து ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்