< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சாவு
வேலூர்
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சாவு

தினத்தந்தி
|
15 Jun 2022 10:37 PM IST

காட்பாடி பகுதியில் இருேவறு இடங்களில் நடந்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

காட்பாடியை அடுத்த பொன்னை இளையநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 24). இவர் சம்பவத்தன்று வேலூரை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். வள்ளிமலை கூட்ரோடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மற்றொரு மோட்டார்சைக்கிள் சிவக்குமார் மீது மோதியது. இதில் சிவக்குமாரின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி சிவக்குமார் நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் சிவராமன் (21). இவரும் சம்பவத்தன்று மெட்டுக்குளத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். கல்புதூர் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கண்ட இரு விபத்தகள் குறித்து காட்பாடி போலீசில் தனித்தனியே புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், விபத்துகளில் சிக்கிய இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது, என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்