< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில்2 வாலிபர்கள் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில்2 வாலிபர்கள் பலி

தினத்தந்தி
|
3 Sept 2023 12:00 AM IST

புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்து

புதுக்கோட்டை அருகே செம்பட்டிவிடுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 27). அதேபகுதியை சேர்ந்தவர்கள் சதீஸ்வரன் (28), விக்னேஷ் (24). தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் கடந்த 31-ந்தேதி இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் முள்ளூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விவேக் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் முள்ளூர் ரவுண்டானா அருகே வந்த போது தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் பலி

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் விவேக் அன்றைய தினம் இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சதீஸ்வரனும் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். விக்னேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்