திருவண்ணாமலை
மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் சாவு
|திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்து திரும்பிய போது தானிப்பாடி அருகே புளிய மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்து திரும்பிய போது தானிப்பாடி அருகே புளிய மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கிரிவலம்
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
நேற்று இரவு பவுர்ணமி தொடங்கியதையொட்டி ஆத்தூர் அருகே கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 24),
இவரது உறவினரான அரூர் அருகே பைநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் விக்னேஸ்வரன் (19), சேட்டு என்பவரது மகன் தமிழரசன் (21) ஆகிய 3 பேரும் கிரிவலம் செல்ல காரில் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
நேற்று இரவு கிரிவலம் சென்றனர். பின்னர் இன்று அதிகாலை காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
மரத்தில் கார் மோதி 2 பேர் பலி
காரை விக்னேஸ்வரன் ஓட்டினார். தானிப்பாடி அருகே மோத்தக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட காவேரிப்பட்டினம் என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டின் ஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
இந்த விபத்தில் விக்னேஸ்வரன், மோகன்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த தமிழரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிவலம் வந்த 2 வாலிபர்கள் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.