திருச்சி
2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
|2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
லால்குடி:
தற்கொலை
லால்குடி அருகே மணக்கால் சூசையாபுரத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் பாலமணிகண்டன்(வயது 23). இவர் சில ஆண்டுகளாக திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது ஊருக்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அங்கு சென்று, பாலமணிகண்டனின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரணம் என்ன?
இதேபோல் ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்த பரணிதரனின் மகன் ராஜ்குமார்(28). இவர் கரூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.