< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
2 Aug 2023 12:15 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை மாவட்ட மேலாளர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆய்வு குழுவினர், டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களாக பணிபுரிந்த பாலசுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

2 பேர் பணியிடை நீக்கம்

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர்கள் பாலசுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்