< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
மாநில செய்திகள்

தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
9 Sept 2023 11:49 PM IST

தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 2 பேர் தற்காலிக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணி காவலர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணி காவலர்களான முரளி (35) மற்றும் நிர்மல்குமார் (33) ஆகியோர் இருவரும் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், காவலர்கள் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்