சாக்கடை கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து 2 மாணவர்கள் பலி
|சாக்கடை கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.
தேனி,
தேனி மாவட்டம் வடுகப்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. அவருடைய மகன் அஸ்வின் (வயது 19). அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் யுவராஜா (19). இவர்கள் 2 பேரும், பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள், நேற்று காலை வடுகப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வடுகப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஸ்வின் ஓட்டினார். யுவராஜா பின்னால் அமர்ந்திருந்தார்.
2 பேர் பலி
தேனி-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றது. சேடப்பட்டி பகுதியில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிளை அஸ்வின் திருப்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மைல்கல்லின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள், அருகே உள்ள பாலத்தில் மோதி சாக்கடை கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் சாக்கடை கால்வாய்க்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.