< Back
மாநில செய்திகள்
குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தினத்தந்தி
|
4 Sept 2022 12:09 AM IST

களம்பூர் அருகே நண்பர்களுடன் குட்டையில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.

ஆரணி

களம்பூர் அருகே நண்பர்களுடன் குட்டையில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.

குளிக்க சென்றனர்

ஆரணி தாலுகா களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன். இவரது மகன் நோமிநாதன் (வயது 14). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சக்திவேல் (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்களும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களான இம்ரான், ஜீவஜோதி, தாமரை ஆகிேயாரும் நண்பர்களாவர்.

இவர்கள் ஊருக்கு அருகில் கீழ்ப்பட்டு கிராமத்தில் கல்குவாரி அருகே கரிகுன்று பகுதி குட்டை உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் குட்டையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. மாணவர்கள் 5 பேரும் அந்த குட்ைடக்கு சென்று குளித்தனர்.

அப்போது நோமிநாதன், சக்திவேல் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி விட்டனர். மற்ற 3 பேரும் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் ஓடிவந்து ஊருக்குள் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து கிராம மக்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் நோமிநாதன், சக்திவேல் ஆகிேயார் இறந்து விட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

பள்ளி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்