< Back
மாநில செய்திகள்
2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தினத்தந்தி
|
13 Sept 2023 12:15 AM IST

திருவாடானை, தொண்டி பகுதியில் அதிகாரிகள் நடவடிக்கையால் 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

தொண்டி,

திருவாடானை, தொண்டி பகுதியில் அதிகாரிகள் நடவடிக்கையால் 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

16 வயது சிறுமி

திருவாடானை தாலுகா மங்கலக்குடியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ், சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் முத்துலெட்சுமி, ராமநாதபுரம் சைல்டு ஹெல்ப்லைன் சமூக பணியாளர் வாசுகி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அந்த சிறுமியை மீட்டு ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மற்றொரு சிறுமி

இதேபோல் தொண்டி அருகே உள்ள பாசிபட்டினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மெர்சி, ஊரக அலுவலர் முத்துலட்சுமி, ராமநாதபுரம் சைல்டு ஹெல்ப்லைன் மேற்பார்வையாளர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் சிறுமியின் திருமணத்தையொட்டி நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமியை மீட்டு ராமநாதபுரம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.

அங்கு அந்த சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரது சகோதரியிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். அந்த சிறுமி பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்