வேதாரண்யம் அருகே இலங்கை வாலிபர்கள் 2 பேர் கைது - போலீசார் விசாரணை
|வேதாரண்யம் அருகே இரண்டு இலங்கை வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்
இலங்கை யாழ்பாணம் மாவட்டம் பலாலி என்ற பகுதியில் இருந்து கடந்த மாதம் 31தேதி மாலை ஒரு பைபர் படகில் ஜனார்தனன், ஜெசிகரன் ஆகிய இருவரும் வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு கடற்கரைக்கு வந்திருப்தாக கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இரண்டு இலங்கை வாலிபர்களையும் கைது செய்து வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் தனித்தனியாக இருவரிடமும் விசாரணை செய்ததில் இவர்கள் இரண்டுபேரும் இலங்கையிலிருந்து வேதாரண்யம் அடுத்த சிறுதலைக்காடு கடற்கரையில் இருந்து கஞ்சா வாங்கி கடத்திக்கொண்டு இலங்கைக்கு போக இருந்தது தெரியவந்தது.
இருவரும் இலங்கையில் இருந்து படகில் வந்து கொண்டிருந்த போது படகு இடையில் பழுதானதால் இவர்களால் சரியான நேரத்தில் கஞ்சாவை பெற்று கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் படகை காட்டுப்பகுதியில் மறைத்து வைத்துவிட்டு கடற்கரையில் நின்றதாக விசாரணையில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாஸ்போர்ட் இல்லமால் தமிழகம் வந்ததாக இலங்கை வாலிபர்கள் மீது வழக்குபதிவு செய்து அவர்கள் வந்த படகை பறிமுதல் செய்தனர்.