ஈரோடு
தொழிலாளியை வெட்டிய மாமனார் உள்பட 3 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
|தாளவாடி அருகே தொழிலாளியை வெட்டிய மாமனார் உள்பட 3 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தாளவாடி
தாளவாடி அருகே தொழிலாளியை வெட்டிய மாமனார் உள்பட 3 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரிவாள் வெட்டு
தாளவாடியை அடுத்த திகனாரை சேர்ந்தவர் ராமகிஷ்ணன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகன் விக்னேஷ் கார்த்திக் (29). இவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர் திகனாரை பகுதிைய சேர்ந்த ஜோதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவா்களுடைய காதல் திருமணம் ஜோதியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் விக்னேஷ் கார்த்திக் திகனாரை திரும்பினார். அன்று இரவு வீட்டில் பேசிக்கொண்டிருந்த விக்னேஷ் கார்த்திக்கை, ஜோதியின் தந்தை பால்ராஜ், தாய் துளசியம்மா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தீவிர தேடுதல்
இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் கார்த்திக், மீட்கப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விக்னேஷ் கார்த்திக்கை வெட்டிய அவருடைய மாமனார் பால்ராஜ், மாமியார் துளசியம்மா உள்பட 3 பேரை பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. குற்றவாளிகள் கர்நாடக மாநிலம் தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.