< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
2 பாம்புகள் பிடிபட்டன
|9 Jun 2022 10:16 PM IST
நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பிடிப்பட்டன.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 27). இவருக்கு சொந்தமான நிலத்தில் 2 பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தன.
இதைப் பார்த்த அவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பாம்புகளை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
பாம்புகள் பின்னி பிணைந்திருந்த காட்சியை அப்பகுதி இளைஞர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.