< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
நொய்யல் பகுதியில் சுற்றித்திரிந்த 2 பாம்புகள்
|20 Oct 2022 11:59 PM IST
நொய்யல் பகுதியில் சுற்றித்திரிந்த 2 பாம்புகள் பிடிபட்டன
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள சிவன் கோவில் அருகே காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக சிறிய பாலம் ஒன்று உள்ளது. அந்தப் பாலத்தின் ஓரத்தில் உள்ள துவாரத்தில் 6அடி நீளம் உள்ள நாக பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட சிவன் கோவில் பகுதிக்குச் சென்று பாலத்தின் ஓரத்தில் இருந்த பாம்பை பிடித்தனர்.இதேபோல் புகழூர் செம்படாபாளையம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை மெயின் ரோட்டின் எதிரே உள்ள மரத்தில் 5அடி நீளம் உள்ள பச்சைபாம்பு ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பாம்பையும் பிடித்தனர்.பின்னர் பிடிப்பட்ட பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன.