< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
|14 Oct 2022 2:38 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள 90'ஸ் காபி பார் மற்றும் கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இந்த கடைகளில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது மீண்டும் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, 2 கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர்.