< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
|8 Oct 2023 1:05 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
விருதுநகர் நகராட்சி சாலையில் தங்கவேல் (வயது 81) என்பவரது கடையிலும், இந்நகர் கச்சேரி ரோட்டில் உள்ள ஜெயக்குமார் (39) என்பவரது பெட்டிக்கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இந்நகர் பஜார் போலீசார் மற்றும் மேற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ராவின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி அம்ஜத் இப்ராஹிம் முன்னிலையில் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் மேற்கு போலீசார் மேற்கண்ட 2 கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர்.