< Back
மாநில செய்திகள்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !
மாநில செய்திகள்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

தினத்தந்தி
|
7 March 2023 8:42 AM IST

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 36) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களுக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்