புதுக்கோட்டை
2 மலைப்பாம்புகள் பிடிபட்டன
|காரையூர், திருமயத்தில் 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன.
காரையூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி செட்டிகளத்தை சேர்ந்த அடைக்கன் என்பவருக்கு சொந்தமான வீடு அருகே கோழியே விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அடைக்கன், மறவாமதுரை கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் திருமயம் அருகே உள்ள சீமானூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது வீட்டின் அருகே ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.