< Back
மாநில செய்திகள்
கஞ்சா கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓட்டம் : போலீசார்  வலைவீசி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கஞ்சா கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓட்டம் : போலீசார் வலைவீசி

தினத்தந்தி
|
18 Dec 2022 12:15 AM IST

சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓட்டம்

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தியபோது அவர்கள் கஞ்சாவை கீழே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தபோது அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்