பெரம்பலூர்
வக்கீலை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
|வக்கீலை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 58). வக்கீலான இவர் நேற்று முன்தினம் மதியம் பெரம்பலூர் வெங்கடேசபுரம் அலுவலகத்தில் இருந்த போது 2 பேர் அவரை தாக்கி விட்டு, அங்கிருந்த நாற்காலியையும் அடித்து நொறுக்கி விட்டு சென்றனா். இதையொட்டி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேகர் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வக்கீல் சேகரை தாக்கிய அண்ணாதுரை, குருசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் எதிரிகளுக்கு ஆதரவாக யாரும் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யக்கூடாது என்று முடிவு செய்தும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் வேறு வக்கீல்கள் தாக்கப்பட்டாலும் எதிரிகளுக்கு ஆதரவாக யாரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யக்கூடாது என்பதனை வலியுறுத்தியும் பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.