< Back
மாநில செய்திகள்
ராஜபாளையம் ேபாலீஸ் நிலையம் அருகே 2 பேருக்கு கத்திக்குத்து
விருதுநகர்
மாநில செய்திகள்

ராஜபாளையம் ேபாலீஸ் நிலையம் அருகே 2 பேருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
13 Sept 2023 1:31 AM IST

ராஜபாளையம் ேபாலீஸ் நிலையம் அருகே 2 பேரை கத்தியால் குத்தினர்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபரும், சிவகாசி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சமூக வலைத்தளம் மூலமாக பழகி காதலித்து வந்தனர். இந்தநிலையில் அந்த வாலிபரின் பெற்றோர், அந்த பெண்ணின் வீட்டிற்கு திருமணத்தை பேசுவதற்காக சென்றனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொடுக்க மறுத்து தகாத வார்த்தையால் பெண் வீட்டினர் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்ணும், வாலிபரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் செய்ய முயன்றனர்.

அப்போது, ெபண்ணின் தந்தை போலீஸ் நிலையத்திற்கு வந்தார். போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த அந்த வாலிபரை கத்தியால் குத்த முயன்றார். அதனை தடுத்த அந்த வாலிபரின் உறவினர்கள் 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்