< Back
மாநில செய்திகள்
பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே நடைபாதையில் கடை வைக்க இடம்பிடிக்கும் தகராறில் 2 பேருக்கு கத்தியால் வெட்டு
சென்னை
மாநில செய்திகள்

பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே நடைபாதையில் கடை வைக்க இடம்பிடிக்கும் தகராறில் 2 பேருக்கு கத்தியால் வெட்டு

தினத்தந்தி
|
19 April 2023 11:08 AM IST

பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே நடைபாதையில் கடை வைக்க இடம்பிடிக்கும் தகராறில் 2 பேரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில், பரங்கிமலை ெரயில் நிலைய முகப்பு நடைபாதையில் காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு ஆதம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி, அவருடைய மகன் தாமு ஆகியோர் காய்கறி கடை நடத்தி வருகின்றனர்.

அதேபோல ராதா என்பவருடைய மகள் ரோஜா என்பவரும் காய்கறி விற்பனை செய்கின்றார். இவர்களுக்கு அருகில் ரோஜாவின் சகோதரி மஞ்சு என்பவரின் கணவர் கார்த்திக் (40) பூக்கடை நடத்தி வருகிறார்.

லட்சுமிக்கும், ரோஜாவுக்கும் நடைபாதையில் இடம் பிடித்து கடை போடுவதில் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் இதுெதாடர்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது தனது நண்பர்களுடன் அங்கு வந்த தாமு கூச்சலிட்டார். ரோஜாவுக்கு ஆதரவாக கார்த்திக், அவருடைய நண்பர் அஜித் (37) என்பவரும் அங்கு வந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தாமு, தனது நண்பர்களுடன் சேர்ந்து திடீரென கார்த்திக், அஜித் இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து ரோஜாவின் உறவினர்கள் கார்த்திக் உள்பட 2 பேரையும் கத்தியால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி திடீரென பரங்கிமலை ெரயில் நிலையம் அருகில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததால் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்