திருவள்ளூர்
திருத்தணியில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 2 பேர் கைது
|திருத்தணியில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள போண்டா ராமலிங்கம் தெருவில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று போண்டா ராமலிங்கம் தெருவில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் ஆந்திர மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திக்கொண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த 2 பெண்ணிடம் விசாரித்த போது வேலை தருவதாக கூறி வீட்டில் அடைத்து வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தனர். பின்னர் 2 பெண்களையும் எச்சரித்து சொந்த ஊருக்கு அனுப்பினர். வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த திருத்தணி ஒன்றியம் எல்.என்.கண்டிகை சேர்ந்த குப்புசாமி மகன் ராமதாஸ் (வயது 52), திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த முரளி (38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.