< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த 2 பேர் படுகாயம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
3 Oct 2023 7:59 PM IST

கடம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.

கடம்பத்தூரை சேர்ந்தவர் சுமன். இவரது மகன் தனுஷ் (வயது 18). நேற்று முன்தினம் தனுஷ் அப்பகுதியை சேர்ந்த யுவன் சங்கர் (8) என்ற சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் கடம்பத்தூர் பஜாருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அவர்கள் கடம்பத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி இரண்டு பேரும் கீழே விழுந்தனர். இதில் இரண்டு பேரும் படுகாயமடைந்தனர். இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்