< Back
மாநில செய்திகள்
அரசு அலுவலர் உள்பட 2 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசு அலுவலர் உள்பட 2 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி

தினத்தந்தி
|
13 Aug 2023 1:15 AM IST

பெரம்பலூரில் அரசு அலுவலர் உள்பட 2 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டின் பூட்டு உடைப்பு

பெரம்பலூர் புறநகா் பகுதியான துறைமங்கலம் ராஜா நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை.

வலைவீச்சு

இதேபோல் துறைமங்கலம் கே.கே.நகர், 5-வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர் பிரேம்குமார் (35) என்பவரது வீட்டின் கதவின் பூட்டு மர்ம ஆசாமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் ஏதும் திருட்டு போகவில்லை.

இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் ஒரே கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மர்ம ஆசாமிகளை பெரம்பலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்