< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
அதிவேகமாகமோட்டார் சைக்கிளை ஓட்டிய 2 பேர் கைது
|8 July 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை ரெயில்வே கேட் பகுதியில் மேற்கு போலீசாரும், காந்தி சிலை அருகில் நகர போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக கண்டாச்சிபுரம் அருகே ஒடுவன்குப்பத்தை சேர்ந்த விஜயராமன் (வயது 26), விழுப்புரம் அருகே ப.வில்லியனூரை சேர்ந்த ராகுல் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.