< Back
மாநில செய்திகள்
வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது - 22 பவுன் நகை பறிமுதல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது - 22 பவுன் நகை பறிமுதல்

தினத்தந்தி
|
8 July 2022 1:58 PM IST

வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாங்காட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.

மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து விசாரித்த போது அவர்கள் கொளத்தூரை சேர்ந்த மாணிக்கம் (37), முருகானந்தம் (41) என்பது தெரியவந்தது.

அவர்கள் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்