< Back
மாநில செய்திகள்
இருசக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

இருசக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 Sept 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை

போலீசார் ரோந்து

எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையில் போலீசார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கூட்டுரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை செய்ய முயன்ற போது அவர்கள் அங்கிருந்து திடீரென தப்பி சென்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் விடாமல் அவர்களை பின்னால் துரத்தி சென்று பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்த ரவி(வயது 55), ஆதியூர் பகுதியை சேர்ந்த சாமிதுரை மகன் சிவா(23) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடி வரப்பட்டதும், ஏற்கனவே ஒரு இருசக்கர வாகனத்தை திருடி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்