< Back
மாநில செய்திகள்
திருநின்றவூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருநின்றவூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
12 Feb 2023 1:27 PM IST

திருநின்றவூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் போலீஸ் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை திருநின்றவூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், 2 பேரையும் திருநின்றவூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், செங்குன்றம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20) மற்றும் பரத் (22) என்பதும், இவர்கள் ஓட்டி வந்தது, திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், பரத் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்