திருவண்ணாமலை
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
|தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37) சம்பவத்தன்று இவர் வாணாபுரம் அருகே தொண்டமானூர் பகுதியில் அவரது மாமனார் நாராயண சாமியிடம் பேசிக் கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன், வெண்ணிலா, முருகன், ஜெயவேல் ஆகிய 4 பேரும் வெங்கடேசனை அவதூறாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கஇதனால் காயம் அடைந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருங்குளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன், வெண்ணிலா, முருகன், ஜெயவேல்ஆகிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் பாண்டியன், ஜெயவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.