< Back
மாநில செய்திகள்
கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
25 Sept 2023 4:45 PM IST

கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 23), விழுப்பும் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (27). இவர்கள் இருவரும் பூந்தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி உணவகத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் துணிகள் எடுப்பதற்காக முடிச்சூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். வரதராஜபுரத்தில் நன்கு தெரிந்த அருண் என்பவர் அவர்களை வழிமறித்து மிரட்டி அங்கு உள்ள புதருக்குள் அழைத்து சென்றனர். அப்போது உள்ளே இருந்த அவரது நண்பர்களில் ஒருவர் சுதாகரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து அவர் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியையும் 3 தங்க மோதிரத்தையும் பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து சுதாகரை சிகிச்சைக்காக தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 24) இளங்கோ (வயது 23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் சுதாகரை தாக்கி தங்கச்சங்கிலி, மோதிரம் போன்றவற்றை பறித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சோமங்கலம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து தங்கச்சங்கிலி, 3 மோதிரம் என 3½ சவரன் நகையை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்