< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி உயிரிழப்பு
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி உயிரிழப்பு

தினத்தந்தி
|
4 April 2024 1:11 AM IST

எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவள்ளூர்,

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலைகளை செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிவடைந்த நிலையில், 4 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது தொழிலாளர்கள் சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய 2 பேர் நடைமேடையை விட்டு இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சென்னையில் இருந்து ஆந்திரா வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவர் மீதும் மோதியதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரெயில் மோதி உயிரிழந்த 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சொந்த ஊர் செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு வந்த தொழிலாளர்கள் 2 பேர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் செய்திகள்