அரியலூர்
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வழிப்பறி
அரியலூரில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே கடந்த மாதம் 6-ந்தேதி இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம், கொளக்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது 37), விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த முனியாண்டி ராஜா (48) ஆகிய 2 பேரையும் அரியலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது அரியலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் பரிந்துரையை ஏற்று ரமேஷ், முனியாண்டி ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரமேஷ், முனியாண்டி ராஜா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் அரியலூர் போலீசார் நேற்று வழங்கினர்.