< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மின் மோட்டாரை திருட முயன்ற 2 பேர் போலீசில் ஒப்படைப்பு
|27 July 2022 12:48 AM IST
மின் மோட்டாரை திருட முயன்ற 2 பேர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 78). இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் திருக்காம்புலியூர் பகுதி செல்லாண்டி அம்மன் கோவில் அருகே உள்ளது. இந்தநிலையில் இங்குள்ள மோட்டார் அறையில் வைத்திருந்த மின் வயர்கள், மின் உதிரி பாகங்கள், ஏணி போன்றவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்தில் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் ராமனுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மின்மோட்டார் மற்றும் வயர்களை திருட முயற்சி செய்த 2 நபர்களை மடக்கி பிடித்து மாயனூர் போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.