< Back
மாநில செய்திகள்
சாராயம் விற்ற 2 பேர் சிக்கினர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சாராயம் விற்ற 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
6 Aug 2023 12:15 AM IST

சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம்,

பகண்டைகூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரிஷிவந்தியம் அருகே தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ் மகன் அடைக்கலராஜ் (வயது 35) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அடைக்கலராஜிக்கு திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் அரவிந்த் (25) என்பவர் சாராயத்தை கடத்தி வந்து விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அரவிந்த்தை போலீசார் கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து அடைக்கலராஜ் மூலம் அரவிந்த்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனைக்கு சாராயம் கொண்டுவருமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சாராயத்தை கடத்தி வந்த அரவிந்த்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அடைக்கலராஜ், அரவிந்த் ஆகியோரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்