< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
|15 May 2023 12:15 AM IST
பகண்டை கூட்டுரோடு அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரிஷிவந்தியம்
பகண்டைகூட்டுரோடு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோலை தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 46) மற்றும் ஏந்தலை சேர்ந்த சுதாகர் (45) ஆகிய இருவரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து ஏழுமலை, சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.