< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் சங்கிலி பறித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் சங்கிலி பறித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
23 Feb 2023 12:30 AM IST

மூதாட்டியிடம் சங்கிலி பறித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் கடந்த மாதம் 10-ந்தேதி மதியம் 3 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி பறித்து சென்ற வழக்கில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரியமங்கலம் காமராஜ்நகர் ஜி.டி.நாயுடு தெருவை சேர்ந்த ஷேக்தாவூத் (வயது 33), சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (24) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்