< Back
மாநில செய்திகள்
தம்பதியரை தாக்கிய 2 பேர் சிக்கினர்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தம்பதியரை தாக்கிய 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
23 Oct 2023 1:15 AM IST

தம்பதியரை தாக்கிய 2 பேர் சிக்கினர்

கணபதி

கோவை ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் நியாஷ் (வயது31). நெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியின் உறவினர் நாகராஜ் (46). நேற்று நாகராஜ் குடிபோதையில் நியாசின் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை நியாஷ் கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாகராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தனது நண்பர் ராமகிருஷ்ணனை அழைத்துகொண்டு மீண்டும் அங்கு வந்துள்ளார்.

அப்போது இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் நியாசை தாக்கினர். தடுக்க முயன்ற நியாசின் மனைவியையும் தாக்கினர். இதனால் தம்பதியர் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்