< Back
மாநில செய்திகள்
கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
18 Feb 2023 3:01 AM IST

அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஜான்சி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜனவரி 25-ந்தேதி இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், குடும்பத்தினரை கட்டி போட்டு 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கும்பல் 2 மோட்டார் சைக்கிள்களில் தூத்துக்குடி நோக்கி தப்பி சென்றனர். புதுக்கோட்டை பகுதியில் சென்ற போது இவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டதில் காயம் ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

இது தொடர்பாக போலீசார் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். மேலும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சாம் என்ற சம்சுதீன் உள்ளிட்டோர் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று 2 பேரை பெருமாள்புரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்