< Back
மாநில செய்திகள்
மிளா கொம்பு வைத்திருந்த 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மிளா கொம்பு வைத்திருந்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
19 Jun 2023 12:30 AM IST

மிளா கொம்பு வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பை:

அம்பை வனச்சரக பணியாளர்கள், ெநல்லை வனக்காவல் நிலைய வனச்சரக பணியாளர்கள் இணைந்து கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டி பீட் 2 பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தெற்கு பாப்பான்குளம் கிராமம் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் 2 மிளா கொம்புகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் 2 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்