< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
|13 July 2023 10:50 PM IST
போளூர் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போளூர்
போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்- இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போளூரில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் மட்டப்பிறையூர் என்ற இடத்தில் கலசபாக்கம் தாலுகா கொண்டம் காரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜேஷ் (வயது 22), மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் அரவிந்த் (22) ஆகிய இருவரும் அரசு அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்து தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.